முகப்பு

செய்திகள

சேவைகள்

நிழல்படங்கள்

தொடர்புகளுக்கு

எம்மைப்பற்றி

BACK

வடமராட்சி வடக்கு பிரதேச கீதம்

வடமராட்சி வடக்கு பிரதேச கீதம்

பல்லவி
வாழ்க பல்கலை வளம் தரும் ஆலயம்
வாழ்க வளருக வாழியவே வாழியவே
அனுபல்லவி
உள நலம் தானறியும் உன்னத நிர்வாக
வள நிறை கோயில் வனப்புடன் வாழியவே
சரணம்
கடல் பனை வளமிகு துறைமுக மடியில்
கலங்கரை கோபுர உயர் முடி வீடு
வடமராட்சி வட பிரதேசம் நாளும்
உயர்வொடு செயலகம் எழும் தினம் நீடு வாழியவே
தலமது சிறக்கவே! நலமது பெருகவே!
புலம்புகழ் பேறுயர் கல்லூரி தன்னோடு
கலை மிளிர் முத்தமிழ் வித்தகர் உருவாகும்
நிலைதனை பகரும் திருமுக பெறு பூமி வாழியவே
அருங்கலை கவினுயர் ஆடல் பாடல்
தருமுடற் பயிற்சி தக்கதற் கலையும்
விருப்புடன் வேண்டி விளையுமே மேன்மை
இருப்பினைத் தன்னகம் ஊற்றெனத் தருமே வாழியவே
வித்தகர் வான்புகழ் சத்தியம் தான் குறி
சித்திகள் எழுபலர் சொத்துக ளாயுளோர்
எத்தனை செழுமை எம்மனம் புகழும்
நித்தியம் வாழ்த்தும் நிதமறி வோமே வாழியவே


ஆக்கம் : அல்வைய10ர் கே. ஆர். திருத்துவராஜா

துரநோக்கு (Vision)

2010 ஆம் ஆண்டளவில் புதிய தொழில்நுட்பங்களுடன் இணைந்த வினைத்திறனும், பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவை

இலக்கு (Mission)

மக்களின் அபிலாசைகட்கும், அடையாளம் காணப்பட்ட தேசிய முன்னுரிமைகட்கும், ஏற்றதான வினைத்திறனும், பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவையும் உறுதியான நடைமுறையும், பிரதேச கிராமிய மட்டங்களில் உத்தரவாதப்படுத்தல்
பிரதேச செயலாளர்
அலுவலகமும் அலுவலர்களும்

சில பதிவிறக்கங்கள்

இவற்றினை பார்வையிட Adobe Acrobat reader மென்பொருள் அவசியம்

காப்புரிமை யாவும் பிரதேசசெயலகம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை இற்குரியது 2008 | தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி-  ”ஸ்பீட் ஐரி நெற்”