|
வடமராட்சி
வடக்கு பிரதேச செயலக வரலாற்றுப் பின்னணிகள்
இ.விக்கினேஸ்வரமூர்த்தி
நிர்வாக அலுவலர். பிரதேச செயலகம்,வடமராட்சி வடக்கு,பருத்தித் துறை.
1.0. பிரதேச நிர்வாகமம் அதன் பின்னணியும்
இலங்கையில்
போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியின் போது திசாவு திசாவணி என்ற
பெயர்களில் இடம்பெற்ற பிரதேச நிர்வாகம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அவை
மாகாண நிர்வாகமாக மாற்றமடைந்தன. 1983 இல் இலங்கை வடக்கு, மேற்கு, கிழக்கு,
தெற்கு, மத்தி என்ற அடிப்படையில் 05 மாகாணங்களாக பிரிக்கப்பட்டு
நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1845 இல் வடமேல் மாகாணமும் 1866 இல் ஊவா
மாகாணமும் 1873 இல் வடமத்திய மாகாணமும் 1889 இல் சப்பிரகமுவ
மாகாணமும்நிறுவப்பட்டன. அரசாங்க அதிபர்களே அம் மாகாணங்களுக்கு பொறுப்பாக
இருந்தனர். 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் விதப்புரையின் படி 09
மாகாணங்களிலும் 19 மாவட்டங்கள் நிறுவப்பட்டன. 1955 ஆம் ஆண்டில்
மேற்கொள்ளப்பட்ட அரச நிர்வாக மாற்றங்களின் படி அரசாங்க அதிபர் ஒவ்வொருவரது
அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசமானது மாவட்டம் என வரையறுக்கப்பட்டது. மேலும்
அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கை 20 ஆக வரையறுக்கப்பட்டது. 1959 இல்
மொனறாகலை மாவட்டமும் 1961 இல் அம்பாறை மாவட்டமும் 1978 இல் கம்பகா,
முல்லைத்தீவு மாவட்டமும், 1984 இல் கிளிநொச்சி மாவட்டமும் பதிய
மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. அதனால் மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக
அதிகரித்தது. பிரதேச செயலாளர் பிரிவும் கிராம சேவையாளர் பிரிவும் ஒரு
மாவட்டத்தின் நிர்வாகம் சார்ந்த உப பிரிவுகளாகும். ஒரு மாவட்டத்திற்குப்
பொறுப்பான அதிகாரி மாவட்டச் செயலாளரெனவும் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குப்
பொறுப்பான அதிகாரி பிரதேசச் செயலாளரெனவும் அழைக்கப்பட்டனர்.
2.0 பிரதேச செயலகத்தின்
உருவாக்கம்
நிர்வாகத்தை மக்கள் பால்
கொண்டு செல்லல் என்ற புதிய நிர்வாக சிந்தனையின் அடிப்படையில்
உருவாக்கப்பட்டவையே பிரதேசச் செயலகங்களாகும். 1992 இல் உருவாக்கப்பட்ட 58
ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் மாவட்ட அரசாங்க அதிபர்களினால்
கவனிக்கப்பட்டு வந்த பல கடமைப் பொறுப்புகள் பிரதேசச் செயலாளர்களுக்கு
கையளிக்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் 01.03.1993 முதல் பிரதேச செயலகங்கள்
இயங்க ஆரம்பித்த போதும் யாழ் மாவட்டத்தில் செயற்பாடுகள் காலம் தாழ்த்தியே
ஆரம்பிக்கப்பட்டன. அந்த வகையில் வடமராட்சி வடக்கு செயலகமும் 01.06.1996
முதல் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது. பிரதேச செயலகங்கள் அண்மைக்
காலமாக அரசாங்கத்தின் பிரதான நிர்வாக மையமாக மாற்றமடைந்து வருவதுடன்
மக்களிற்கான சேவையை கிராம மட்டத்திலேயே நிறைவு செய்யும் செயலகமாக உருவாகி
வருகின்றன.
3.0 அமைவிடமும்
குடிப்பரம்பலும்
யாழ்ப்பாணத்திலிருந்து
வடகிழக்கு புறமாக 34 மஅ தொலைவில் அமைந்துள்ள வடமராட்சி வடக்கு பிரதேசம் 116
கிராமங்களைக் கொண்ட 35 கிராம அலுவலர்களை உள்ளடக்கிய 50.2 சதுர கிலோமீற்றர்
பரப்பளவைக் கொண்ட ஒரு பிரதேசம் ஆகும். இதன் வடக்கு எல்லையாக பாக்கு நீரிணை
கடலும் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடா கடலும் இதன் தெற்கு எல்லையாக
வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க பிரிவு மற்றும் வடமராட்சி தெற்கு மேற்கு
பிரதேச செயலாளர் பிரிவுகளும் மேற்கு எல்லையாக வலிகாமம் கிழக்கு (கோப்பாய்)
பிரதேச செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. தற்போது இச் செயலகப் பிரிவில் 14606
குடும்பங்களைச் சேர்ந்த 47687 மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுள் 4076
குடும்பங்களைச் சேர்ந்த 14222 பேர்கள் இடம்பெயர்ந்தவர்களாவர். மேலும் இச்
செயலக பிரிவில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை ஆகிய இரண்டு நகர சபைகளும்
பருத்தித்துறை பிரதேச சபையுமாக மூன்று உள்@ராட்சி மன்றங்களும் இயங்கி
வருகின்றன.
4.0 செயலகத்தின் ஆரம்ப
கால வரலாறு
ஐரோப்பியர்களாகிய
போர்த்துக்கேயர்,டச்சுகாரர்களின் காலணித்துவ கொள்கைகளிற்கு ஏற்ப 1630 -
1796 வரை அவர்களாலே பழைய நிர்வாக முறைகளே பின்பற்றப்பட்டன. வடமராட்சி என்ற
பிரிவும் அக்காலங்களிலேயே பேணப்பட்டு வந்தது. ஆனால் நாகர் கோவிலுக்கு
அப்பாலுள்ள பிரதேசம் தென்மராட்சியுடன் இணைக்கப்பட்டிருந்தது. மணியகாரர்,
உடையார், விதானை ஆகியோரால் இவை பரிபாலிக்கப்பட்டன. ஆங்கிலேயர்
ஆட்சிக்காலத்திலும் இத்தகைய நிர்வாக கட்டமைப்பே பேணப்பட்டு வந்தது. 1930
களில் கரவெட்டியைச் சேர்ந்த திரு. சின்னத்தம்பி என்பவரும் 1940 களில்
ஆத்தியடியைச் சேர்ந்த திரு. நாகப்பர் வேலுப்பிள்ளை என்பவரும் மணியகாரர்களாக
இருந்துள்ளனர். இவர்கள் மிகவும் செல்வாக்குள்ள செல்வந்த
குடும்பங்களிலிருந்தே தெரிவு செய்யப்பட்டதுடன் தமது அலுவலகங்களை தமது
வீடுகளிலேயே நடாத்தியும் வந்துள்ளனர். 1947 இல் மணியகாரன் முறை
ஒழிக்கப்பட்டு பிரிவு இறைவரி உத்தியோகத்தர் அல்லது காரியதரிசி முறை
அறிமுகப்படுத்தப்பட்டது. வடமராட்சிப் பிரிவின் 1 வது காரியதரிசியாக திரு
.ளு. பெருமையினார் அவர்களும் அவரைத் தொடர்ந்து விருதோரணியசேயோன், திரு ளு.
சிதம்பரப்பிள்ளை, திரு ளு. ப10ரணலிங்கம் திரு விஸ்வநாதன், ஜே. டி ஆனோல்ட்,
திரு. சு. ஜெயகாந்தன், போன்றோர் இறைவரி உத்தியோகத்தர்களாக
கடமையாற்றியுள்ளனர்.
5.0 வடமராட்சி வடக்கு
கிழக்கு காரியாதிகாரி பிரிவு உருவாக்கம்
வடமராட்சிப் பிரதேசம்
பரந்த நிலப்பரப்பையும் அதிக சனத்தொகையையும் கொண்டிருந்த காரணத்தால்
பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு
1960 களில் வடமராட்சி வடக்கு கிழக்கு, வடமராட்சி தெற்கு மேற்கு என இரண்டு
காரியதரிசி பிரிவுகள் உருவாக்கப்பட்டன. வடமராட்சி வடக்கு கிழக்கு காரியதரிசி
பிரிவு தொண்டைமானாறு முதல் தற்போதய வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர்
பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் வரையிலான ஒரு நீண்ட கரையோர பிரதேசத்தைக்
கொண்ட 19 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.
1969 இல் காரியதிகாரி முறை ஒழிக்கப்பட்டு உதவி அரசாங்க அதிபர் முறை கொண்டு
வரப்பட்டது. வடமராட்சி வடக்கு கிழக்கு உதவி அரசாங்க அதிபர்களாக திரு. மு.
தம்பிமுத்து, திரு. க.மார்க்கண்டு, திரு வை. வேலும்மயிலும் போன்றோர்
கடமையாற்றியுள்ளனர். திரு வை. வேலும்மயிலும் அவர்கள் உதவி அரசாங்க அதிபராக
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி
இருந்ததுடன் இவர் ஒரு நடமாடும் செயலகமாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்க
அம்சமாகும்.
6.0 வடமராட்சி வடக்கு
உதவி அரசாங்க அதிபர் பிரிவு உருவாக்கம்
வடமராட்சி வடக்கு
கிழக்கு உதவி அரசாங்க அதிபர் ஒரு நீண்ட கரையோரப் பிரதேசத்தை
கொண்டிருந்தமையால் 1989 இல் வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு என இரண்டு
உதவி அரசாங்க அதிபர் பிரிவகளாக பிரிக்கப்பட்டது. வடமராட்சி வடக்கு உதவி
அரசாங்க அதிபர்களாக திரு. மு. தம்பிப்பிள்ளை, திரு. ளு.சிறீநிவாசன், திரு.
ளு.முருகேசம்பிள்ளை போன்றோர் கடமையாற்றியுள்ளனர். திரு. ளு.முருகேசம்பிள்ளை
ஓய்வு பெற்ற பின்னர் செயலக காணிக் கொன்வனவுக் குழுவின் தலைவராக செயற்பட்டு
செயலக காணிக் கொன்வனவுக்கு அரும்பணியாற்றியமை ஒரு குறிப்பிடத்தக்க
அம்சமாகும்.
7.0 மாகாண சபையும்
பிரதேச நிர்வாகமும்
1987 ஆம் ஆண்டில்
அரசியல் யாப்பில் 13 ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாண சட்டத்தின்
கீழ் வடக்கு கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதுடன் 1991 இல் உதவி
அரசாங்க பணிமனைகளில் கடமையாற்றிய அலுவலர்கள் மாகாணசபைக்கு
உள்வாங்கப்பட்டதுடன் மாகாணசபையின் குறித்து ஒதுக்கப்பட்ட கடமைகளை
கவனிப்பதற்காக உதவி அரசாங்க அதிபர்கள் உதவி மாவட்ட ஆணையாளர்களாகவும் மாவட்ட
அரசாங்க அதிபர்கள், மாவட்ட ஆணையாளர்களாகவும் இக்காலப்பகுதிகளில்
செயற்பட்டனர்.
8.0 பிரதேச செயலகத்தின்
உருவாக்கம்
வடமராட்சி வடக்கு
பிரதேச செயலகம் 01.06.1996 முதல் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது. இதன்
முதலாவது பிரதேச செயலாளராக திரு. ஆ.சிவசுவாமி அவர்கள் கடமையாற்றி இருந்தார்.
இவர் இச் செயலகப் பிரிவில் 1994 இலிருந்து ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக
கடமையாற்றியதுடன் தற்போது யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராகவும்
கடமையாற்றி வருகின்றார். இவருடைய காலப்பகுதியிலேயே புதிய கட்டடத்திற்கான
காணிக் கொள்வனவும் அடிக்கல் நாட்டு வைபவமும் இடம்பெற்றது. திரு. ஆ.சிவசுவாமி
அவர்களைத் தொடரந்து திரு ளு.வசந்தகுமார் அவர்களும் அவரைத் தொடர்ந்து
25.05.2005 திரு. இ.வரதீஸ்வரன் அவர்களும் பிரதேச செயலாளராக கடமையாற்றி
வருகின்றார். இவருடைய காலப்பகுதியிலேயே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச
செயலகம் திறக்கப்படுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.
9.0 கடந்த கால அலுவலக
செயற்பாடுகள்
இச் செயலகம்
காரியாதிகாரி அலுவலகமாக இருந்த காலப்பகுதியிலிருந்தே தனியார் கட்டடங்களிலேயே
இயங்கி வருகின்றது. 1950 களிலிருந்து பின்வரும் இடங்களிலுள்ள தனியார்
கட்டடங்களில் இச் செயலகம் இயங்கியுள்ளது.
1950 பருத்தித்துறை
கடற்கரை வீதி
1960 1ஆம் கட்டைச் சந்தியிலுள்ள தனியார் கட்டடம்
1965 மருதடி தற்போதய முருகானந்தன் மருந்தக கட்டடம்
1976 பருத்தித்துறை சிவன் போவிலுக்கு அருகிலுள்ள தனியார் கட்டடம் (தற்போதய
சாயி மந்திரி)
1987 புலோலி கமநல சேவை நிலையம்
1991 மீண்டும் பழைய இடம் (தற்போதய சாயி மந்திரி)
1998 - பருத்தித்துறை இ.போ.ச முன்பாக உள்ள தனியார் கட்டடம்
2007 ஜனவரியிலிருந்து வட இந்து மகளிர் கல்லு}ரிக்கு அருகாமையிலுள்ள
தனியார் கட்டடத்திற்கு பிரதான அலுவலகம் மாற்றப்பட கிளை அலுவலகம் ஒன்று (கணக்கு
கிளை உட்பட வேறு சில கிளைகளும் வெளிக்கள உத்தியோகத்தர்களம்
அடங்கலாக)தொடர்ந்தும் இ.போ.ச முன்பாக உள்ள கட்டடத்திலேயே இயங்கி வருகின்றது.
பிரதேச செயலகத்திற்கென
தனியான கட்டட வசதியின்மை ஆரோக்கியமான நிர்வாக செயற்பாட்டிற்கு ஒரு தடையாகவே
காணப்பட்டது.
10.0 உதவி அரசாங்க
அதிபர் அலுவலக கடமைகளும் ஆளணி விபரமும்
இச்செயலகம் உதவி
அரசாங்க அதிபர் பணிமனையாக செயற்பட்ட காலத்தில் உதவி அரசாங்க அதிபர், ஆளணி
உதவியாளர் மற்றும் ஏழு எழுதுவினைஞர்களுடன் ஒரு சிற்று}ழியரும் இருபது கிராம
அலுவலர்களும் கடமையாற்றி வந்தனர். அப்போதய செயலகத்தின் பிரதான தொழிற்பாடாக
குடியிருப்பாளர் அட்டவணை பராமரித்தல், கூப்பன் முத்திரை விநியோகம், தேர்தல்
இடாப்புகள் தயாரித்தல், தேர்தல்களை வழங்க ஒத்தாசை வழங்கல் போன்றன பிரதான
கடமைகளாக இருந்தன.
10.1. பிரதேச செயலக கடமை
பொறுப்புகளும் ஆளணி விபரமும்
இச்செயலகம் பிரதேச
செயலகமாக தரமுயர்த்தப்பட்டதும் அதிகாரங்கள் கையளிக்கப்பட்டு அதன் கடமைப்
பொறுப்புகளும் செயற்பாடுகளும் அதிகரித்து காணப்படுகின்றன. இதன் பிரதான
கடமைப் பொறுப்புகள் பின்வருமாறு அமைகிறது.
1) பிரதேச அபிவிருத்தி
தொடர்பான செயற்பாடுகள்
2) இடம்பெயர்ந்த குடும்பங்களின் நிவாரண விநியோகம், நலன்புரி செயற்பாடுகள்
மற்றும் மீள்
குடியேற்றம் தொடர்பான கடமைகள்.
3) சமூகசேவைகள் திணைக்களம் சார்ந்த சகல கடமைகளும் (சமூக பாதுகாப்பு
ஓய்வ10திய திட்டம் அடங்கலாக)
4) தேசிய அடையாள அட்டை விநியோக செயற்பாடுகள்.
5) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளலும் அவற்றை உரிய
திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தலும்.
6) அரச காணிகள் தொடர்பான கடமைகள்.
7) ஓய்வ10திய கொடுப்பனவுகள் தொடர்பான செயற்பாடுகள்.
8) வாகன வரி அனுமதிப் பத்திரம் வழங்கல், மற்றும் மோட்டார் போக்குவரத்து
திணைக்கள ஏனையகடமைகள்.
9) சுனாமி போர் அழிவு வீடுகளின் புனர் நிர்மாணம்.
10) அரச சார்பற்ற நிறுவன வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்தலும் மேற்பார்வை
செய்தலும்.
11) சமுர்த்தி நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அதன் சகல செயற்பாடுகளையும்
ஒருங்கிணைத்தலும் கண்காணித்தலும்.
மேலும் பிரதேச செயலகம்
நிரந்தர கட்டடத் தொகுதியில் செயற்படத் தொடங்கியதும் பதிவாளர்திணைக்கள
கடமைகளும் பொறுப்பேற்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதேச அலுவலர் குழாம்
1) பிரதேச செயலாளர்
2) உதவி பிரதேச செயலாளர்
3) உதவி திட்டமிடல் பணிப்பாளர்
4) உதவி பிரதேச செயலாளர் (நிதி)
5) நிர்வாக அலுவலர்கள் - 02 (ஒருவர் வடக்கு மாகாண சபைக்கு விடுவிக்கப்பட
உள்ளார்.)
6) கிராம அலுவலர் (அதி சிறப்பு) 01
7) முகாமைத்துவ உதவியாளர்கள் - 28
8) அபிவிருத்தி இணைப்பாளர் - 02 (இதில் ஒருவர் நெக்ரெப் திட்ட கடமைகளிற்காக
விடுவிக்கப்பட்டுள்ளார்)
9) நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்கள் - 15
10) அபிவிருத்தி உதவியாளர்கள் - 08
11) ஏனைய திணைக்கள அலுவலர்கள் - 04 (பட்டதாரி நியமனங்கள்)
12) வெளிக்கள அலுவலர்கள் - 06
13) கிராம அலுவலர்கள் - 24 (11 பிரிவுகள் வெற்றிடம்)
14) தையல் போதன ஆசிரியை 01
15) நெசவு போதன ஆசிரியை 01
16) சாரதிகள் - 02
17) சிற்று}ழியர்கள் - 06
18) சுனாமி செயற்றிட்ட அலுவலர்கள் - 13
19) சமுர்த்தி முகாமையாளர்கள் - 06
20) சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்கள்
தலைமைச் செயலகம் - 03
வலயம் - 01 சமுர்த்தி வங்கி, வல்வெட்டித்துறை 05
வெளிக்கள அலுவலர்கள் - 17
வலயம் - 02 சமுர்த்தி வங்கி, பருத்தித்துறை 06
வெளிக்கள அலுவலர்கள் - 17
மகாசங்கம் - 03
வடமராட்சி வடக்கு பிரதேச செயலக நிரந்தர கட்டடம் வரலாற்றுச் செயல்முறைப்
பதிவுகளும் நிகழ்வுகளும்
1.0 காணிக்கொள்வனவு
குழுவும் காணிக்கொள்வனவும்
பிரதேச செயலகத்துக்கான
கட்டடம் அமைப்பதற்கு அதற்கான காணி இல்லாமை ஒரு பெரும் குறையாகக் காணப்பட்டது.
காணியைக் கொள்வனவு செய்வதற்கான குழு ஒன்றினை அமைக்கும் பொருட்டு அப்போதய
பிரதேச செயலதளராக கடமையாற்றிய திரு. ஆ.சிவசுவாமி அவர்களின் தலைமையில் நலன்
விரும்பிகளுடனான 1 வது கலந்துரையாடல் 30.01.2001 இல் இடம்பெற்ற இக்குழுவின்
தலைவராக இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர் திரு. எஸ்.முருகேசம்பிள்ளை அவர்கள்
தலைமையிலான காணிக் கொள்வனவு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இக்குழுவில்
செயலாளராக இளைப்பாறிய பருத்தித்துறை நகரசபை செயலாளர் திரு. ந.சோமசுந்தரம்
அவர்களும் பொருளாளராக எமது செயலகத்தைச் சேர்ந்த திரு. க.முருகையா அவர்களும்
செயலாற்றினர். தொண்டைமானாறு,வல்வெட்டித்துறை மக்களின் போக்குவரத்துப்
பிரச்சனைகளை கருத்திற் கொண்டு அவர்களிற்கு வசதியான இடத்தில் கட்டடம்
அமைக்க்கூடியதான காணியை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. நிதி
சேகரிப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் ப10ரணமாக கிடைக்கப்பெற்றது. புலோலி
மத்தி கிராம அலுவலர் பிரிவில் இ.போ.சபைக்கு வடக்குப் புறமாக அமைந்திருந்த
13 பரப்பு விஸ்தீரணமுள்ள காணியை குறைந்த விலையில் (12 இலட்சம் ரூபா)
கொள்வனவு செய்வதற்கு அப்பிரிவு கிராம அலுவலராக கடமையாற்றிய அமரர் திரு.
க.சண்முகநாதன் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் நினைவு கூறப்பட வேண்டிய
ஒன்றாகும். மேலும் இக் காணியை எமக்கு வழங்கி உதவிய அதன் தத்துவ உரிமைக்காரர்
திருமதி. லோ.குமாரசுவாமி அவர்களுக்கும் எவ்வித கொடுப்பனவுமின்றி உறுதியினை
எழுதுவதற்கு உதவிய பிரசித்த நொத்தாரிசு திருமதி. வி.உருத்திரேஸ்வரன்
அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில்எமது செயலகத்தின் சார்பில்
பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் ரூபா
17 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியினை சேகரிக்க உதவிய கிராம அலுவலர்கள்
மற்றும் ஏனையோரும் நன்றியுடன் நினைவுகூறப்படுகின்றனர்.
2.0 பிரதேச
செயலகத்துக்கான காணி கையளிப்பு வைபவம்
செயலக கட்டடம் அமைப்பதன்
பொருட்டு பொதுமக்களின் அன்பளிப்பு மூலம் கொள்வனவு செய்யப்பட்ட காணியை வைபவ
ரீதியாக கையளிக்கும் நிகழ்வு 18.07.2001 இல் இடம்பெற்றது. பொதுமக்கள்
சார்பில் ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபரும் காணிக் கொள்வனவு குழுத்
தலைவருமான திரு. எஸ்.முருகேசம்பிள்ளை அவர்களினால் காணி உறுதி
கையளிக்கப்பட்டது. இதனை அப்போதய அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.
க.சண்முகநாதன் கையேற்றார். பிரதேச செயலாளர் திரு. ஆ.சிவசுவாமி அவர்கள்
தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசியுரையினை சுவாமி சித்ரூபானந்தா
அவர்களும் வண பிதா இருதயதாஸ் அடிகளார் அவர்களும் நிகழ்த்தினர். 3.0 செயலக
கட்டடத்திற்கான
அத்திவாரமிடல்
புதிய பிரதேச
செயலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 19.03.2004 இல் இடம்பெற்றது.
பரத்தித்துறை சாரதா சேவாச்சிரம சுவாமி சித்ரூபானந்தா அவர்களின் ஏற்பாட்டில்
இராமகிரு~;ண மி~ன் இலங்கை கிளையின் தலைவர் சுவாமிஜி ஆத்மகானந்தர் மகராஜி
அவர்களும், அருட்தந்தை சோபன் ரூபஸ் அடிகளார், பிரதேசசெயலாளர், செயலக
அலுவலர்கள் மற்றும் காணிக்கொள்வனவு உறுப்பினர்கள் ஆகியோரால் அடிக்கல்
நாட்டுநிகழ்வு இடம்பெற்றது.
4.0 நிதி ஒதுக்கீடும்
கட்டட நிர்மாணமும்
செயலகத்திற்கான அடிக்கல்
நாட்டு விழா கட்டடத்திற்கான எவ்வித நிதி ஏற்பாடுகளும் இல்லாத
சந்தர்ப்பத்திலேயே மேற்காள்ளப்பட்டது. அப்போதய அரசாங்க அதிபராக இருந்த திரு.
செ.பத்மநாதன் அவர்கள் இக்கட்டடநிர்மாணத்தின் பொருட்டு ஆரம்ப கட்டமாக 2004
இல் 50 இலட்சத்தை விடுவித்தமைக்கு அமைவாக நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
காலத்திற்கு காலம் கிடைக்கப்பெற்ற நிதி ஏற்பாடுகளைக் கொண்டு கிட்டத்தட்ட
300 இலட்சம் ரூபா செலவில் என்று புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதனை கூடிய விரைவில் செய்து முடிக்க வேண்டுமென்று அயராது பாடுபட்ட தற்போதய
திரு. க.கணேஸ் மேலதிக அரசாங்க அதிபர் திரு. ஆ.சிவசுவாமி, பிரதேச செயலாளர்
திரு. இ. வரதீஸ்வரன், கட்டட ஒப்பந்தககாரர், கட்டட திணைக்கள அலுவலர்கள்
அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களாவர். மேலும் இக்கட்டடம் அமைந்துள்ள
காணியின் வடக்கு பக்க சுற்று மதில் அமைத்தல், அரை நிரந்த கட்டடம் ஒன்றை
கட்டியமை மற்றும் கிணறு புனரமைப்பு போன்ற அபிவிருத்தி வேலைகள்
காணிக்கொள்வனவு குழுவினால் மேற்கொள்ளப்பட்டமை ஒரு கறிப்பிடத்தக்க
அம்சமாகும்.
|